இன்று சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> சித் சபேசன் <>
உள்ளத்தி னுள்ளுள்ள உண்மையுணர் வாகநிதம்
உள்ளவுனை உள்ளிச்சித் எனும்வெளியில் உறைநிலையைத்
தெள்ளவுன்றன் சீரடியார் அறியு(ம்)வணம் தில்லையிலே
வள்ளல்நீ ஆடிநிற்கும் மாண்பினையாம் போற்றுவமே..
(தரவு கொச்சகக் கலிப்பா. குறிப்பு: சிதம்பரத் திருத்தலத்தில் புறத்தே நடனமாடும் உருவத்தைக் அடியார்களுக்குக் காண்பிக்கும் சிவபெருமான், அவனது அருவ வடிவத்தைச் சிதம்பர ரகசியம் என்று அழைக்கப்படும், எல்லையில்லாச் சிதாகாசமாகக் (-சித் என்னும் மெய்யறிவாகக்-) காண்பிக்கிறான் என்று கூறுவர்.)
..... அனந்த் 10/11-7-2026
No comments:
Post a Comment