திருச்சிற்றம்பலம்
<> ஒருதனி, பல உரு <>
கற்றைச்
சடையா கழலார் நிறத்தா
...காதார் குழையழகா
......கடிமா மலர்பூண் உமையாள் பாகா
........கணங்கட் கோர்தலைவா
...காதார் குழையழகா
......கடிமா மலர்பூண் உமையாள் பாகா
........கணங்கட் கோர்தலைவா
ஒற்றைத்
தனியாய் உருவில் பலவாய்
.... உலவும் முழுமுதல்வா
.......உண்மைப் பொருளை உலகோர்க் குணர்த்த
.........ஓரால் அடியமர்ந்து
.... உலவும் முழுமுதல்வா
.......உண்மைப் பொருளை உலகோர்க் குணர்த்த
.........ஓரால் அடியமர்ந்து
முற்றிப்
பழுத்த முனிவர் முன்னே
.....முதலும் கடையுமிலா
.......மோனம் பயிலும் குருவே மறையின்
.........முடிவே ஒயிலாகச்
.....முதலும் கடையுமிலா
.......மோனம் பயிலும் குருவே மறையின்
.........முடிவே ஒயிலாகச்
சிற்றம்
பலத்தில் தினமும் அடியார்
... சேவித் துளம்மகிழும்
........தேவா உன்றன் சீரைப் பாடும்
..........திறனைத் தருவாயே.
... சேவித் துளம்மகிழும்
........தேவா உன்றன் சீரைப் பாடும்
..........திறனைத் தருவாயே.
*****
எரிசேர் கரமும் விரிசெஞ் சடையும் குறுமென் னகையும் ஒருசேரப்
பெரிதோர் நடனம் புரிவோய் நீபின் திரிவாய் லிங்க வடிவோடே
அரிதாம் பரம சிவபோ தமதைத் தெரிவார் பரவ உருவில்லா
அருவாய்த் திரையுள் மறைவாய் உன்னை அறிவார் எவர்தாம் உரையாயே!
திருச்சிற்றம்பலம்
*******
*******
... அனந்த் 6-3-2016
No comments:
Post a Comment