Monday, September 7, 2026

இன்று பிரதோஷ நன்னாள் 

திருச்சிற்றம்பலம்

<> குழப்பமும் உண்டோ? <>

அருவுரு ஆனோன் என்பார் 

... ஆணொடு பெண்ணும் என்பார்

.... அண்மையன் சேயோன் என்பார் 

....... அந்தமோ டாதி யென்பார்


இருளொளி இரண்டும் என்பார் 

... ஏகன்அ நேக னென்பார்

..... இலன்உளன் ஆகும் என்பார்  

........ இம்மியும் பெரிதும் என்பார்


இருவகைப் பொருளில் உன்னை

... ஈங்கிவர் முரணாய்க் காணல்

.... ஏழையேன் ஏற்க ஒண்ணேன்  

..... என்னுளே யாவு மாகத்  


திருநடம் ஆடும் ஐய!

... திண்ணமாய் உன்னை நாளும்

.... தெரிசனம் செய்த பின்னர்

.... தெளிவலால் குழப்ப முண்டோ?


(இம்மி = அணு; ஒரு சிறு அளவு (

No comments: