Tuesday, August 24, 2021
Wednesday, July 21, 2021
Wednesday, July 7, 2021
Sunday, June 20, 2021
Monday, June 7, 2021
Sunday, May 23, 2021
Sunday, May 16, 2021
Friday, April 23, 2021
Thursday, April 8, 2021
Thursday, March 25, 2021
Wednesday, March 10, 2021
Tuesday, February 23, 2021
Monday, February 8, 2021
நடிப்பு
திருச்சிற்றம்பலம்
<> நடிப்பு <>
போதும் மதியுமணி பொன்னம் பலத்தரசே
ஏது குறையுமக்கென் றிவ்வாறுஎப் – போதுமோர்
காலை மடக்கிநின்று கட்டப் படுவதுபோல்
நாலுபேர் முன்னால் நடிப்பு?
************
<> புகழில் பங்கு <>
தொண்டைக் குழியில் திரண்டுநிற்கும் நஞ்சுநின்
தொண்டர்க் கருள்திறத்தின் சின்னமெனக் – கண்டவர்அக்
கண்டவிடச் சீர்பற்றிக் கண்டவிடம் பேசிநிற்பர்
உண்டதில்காண் ஓர்பங்(கு) உமைக்கு.
(பொருள் விளக்கம்: அமரரையும் அசுரரையும் ஆலகால விடத் தாக்குதலிலிருந்து காப்பாற்றிய சிவபெருமானது கழுத்தில் தங்கிய விடம் அவனது அருளின் மேன்மையைச் செப்புகின்ற சின்னம் என உணர்ந்த அடியவர்கள் பிறருக்கு அதுபற்றிப் பொது இடங்களில் கூறிச் சிவனைப் புகழ்வார்கள். அந்தப் புகழ்ச்சியில், அக்கொடிய விடம் பெருமானின் மேனி முழுது பரவாமல் அவன் கழுத்தளவில் தங்கவைத்த உமையம்மைக்கு ஒருபங்கு உண்டு என்று ஐயனுக்கு நினைவுபடுத்துவதாக அமைந்தவாறு.)
************
<> உன் பிழை <>
ஏட்டை எடுக்கவைத்தாய் கோலொன்றை என்கரத்தில்
பூட்டி எழுதவைத்தாய் போற்றியுனைப் – பாட்டையிட்ட
பின்னரதில் ஏதும் பிழையிருப்பின் ஐய!அஃது
உன்னதல்லால் என்னதா மோ?
... அனந்த் 8-2-2021 பிரதோஷ நன்னாள்.
Monday, January 25, 2021
ஓரடி மேல்வைப்பு
திருச்சிற்றம்பலம்
<> ஓரடி மேல்வைப்பு <>
ஈரடியில் ஓரடியை நேரடியாய்ச் சிரத்துயர்த்திப்
பாரடியோ என்றுமுனம்
பார்வதிக்குக் காட்டியக்கால்
சீரடியார் தாம்வணங்க ஓரடியே இணையடிக்கு
நேரடியென் றானதுவோ? யாரடிஅச் சூதறிவார்?
ஓரடியார் தம்முள்ளே ஒளிருமடி ஒன்றேஎன் றுணர்வார் தாமே.
(ஓரடியார் ... தாமே: உள்முகமாய் ஆழ்ந்து சிந்திக்கும் அடியவர்கள் தம்முள் ஒளிரும் பரமனின் அடி இரண்டற்றதான மெய்ப்பொருள் ஒன்றேயாம் என்று உணர்வார்கள். இப்பாடல், தரவுகொச்சகக் கலிப்பாவின் மேல் ஓரடி வைத்த யாப்பில் அமைந்தது )
அனந்த் 26-12021 பிரதோஷம்
Wednesday, January 20, 2021
செவியேறுமோ?
(முன்னமுள்ள 4 வரிகளில், ஏந்தி, தாங்கி என்பன பெயர்ச்சொற்களாகப் பயிலும்; பதின்சீர் விருத்தம். அரையடி வாய்பாடு: கூவிளம் மா மா விளம் மா மா)
... அனந்த் 9-1-2021 பிரதோஷம்
Sunday, December 27, 2020
திருச்சிற்றம்பலம்
<> திருக்கோலம் <>
காலொன் றுயர்த்திமறு காலை இருத்திநடம் காட்டுமுனை
நாலும் பெருவாயன் வேலன் இவர்களுடன் நங்கையொரு
பாலும் அருகிருந்து பார்க்கும் திருக்கோலப் பாங்கினையான்
கோலொன் றெடுத்தெழுத்தில் கூட்டும் திறன்பெறநீ கூட்டுவையோ?
(நாலும் பெருவாயன் = தொங்குகின்ற வாயுடைய யானைமுகன்)
<> ஆடும் அரன் <>
நீறாடி அன்பர்பொழி நீராடி அஞ்சடைமேல்
ஆறாடி சீறும் அரவாடி மங்கையொரு
கூராடி கூத்தாடி கூர்வேற் படையாடி
சீர்பாடி உய்வோம் தெளிந்து.
(முதல் மூன்றடிகளில் ஆடி என்பது பெயர்ச்சொல்லாகவும் ஈற்றில் வினையெச்சமாகவும் பயிலும். ஈற்றடியில், பின்னிரு சொற்களை இடம்மாற்றிப் (கொண்டுகூட்டிப்) பொருள் கொள்ளவும்.)
... அனந்த் 27-12-2020, பிரதோஷ நன்னாள்.
Friday, December 11, 2020
அடம்பிடித்தல் ஆமோ?
<> அடம்பிடித்தல் ஆமோ? <>
சுற்றித் திரியும் தொழில்கொண்ட மனத்தினையும்
.. சுகத்திற்(கு) அலையும் புலன்களையும் மிகமுயன்றோர்
Thursday, November 26, 2020
இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> ஒருகால் ..<>
சிரித்தெனை மயக்கும் ஒருகால்
… திருப்பதம்* தன்னைக் காட்டி
வரித்தெனை ஈர்க்கும் ஒருகால்
… மாவினைப் பயனை எல்லாம்
உரித்தெனைக் காக்கும் ஒருகால்*
… உறுபிறப் பிறப்பை வாரா
தெரித்தெனைச் சேர்க்கும் தன்பால்
… தில்லைவாழ் தெய்வ மாமே.
(அறுசீர் விருத்தம்; *ஒரு காலத்தில்; திருப்பதம் = சிவபதம்; சிவசாயுச்சியம்.)
*********
ஒருகா லிருத்தி ஒருகால் உயர்த்தும் உனநடத்தை
ஒருகா லிருத்தி* உடலினை ஓம்புமென் உள்ளினில்நீ
ஒருகா லிருத்தின் எனதுயிர் உய்யும்முன் ஓர்சமயம்
ஒருகா லிருத்தியொர் **கண்ணிடந் தோற்கருள் உத்தமனே
(கட்டளைக் கலித்துறை. உனநடத்தை = உன் நடனத்தை; *கால் = காற்று, இங்கு, மூச்சுக்காற்று; **இடந்து = தோண்டி - கண்ணப்பன் பற்றிய குறிப்பு.)
*********
ஒருகால் உருகுமென் னுள்ளம் உன்னிடம் ஒன்றி,எனில்
ஒருகால் உனைமறந் தெத்தையோ உன்னும் உனையடைய
ஒருகால் இழுத்தொரு கால்விட் டுயர்தவம்* ஆற்றிலனுன்
இருகால் அடிக்கீழ் இருத்திடின் உய்வேன் எனதிறையே.
(கட்டளைக் கலித்துறை. பூரகம், ரேசகம் என்னும் இருவகை மூச்சு)
அனந்த் 27-11-2020
Wednesday, November 11, 2020
கூத்தின் இரகசியம்
<> கூத்தின் இரகசியம் <>
பித்தனென் பேரெனப்
பெருமையாய்ப் பேசிமுன் பேதைசுந் தரனின் முன்னம்
.. பிடிவாதம் செய்(து)அவன்
அடிமையாம் உனக்கெனப் பிறரைநீ
நம்ப வைத்தாய்
அத்தனை பிட்டையும்
அளியெனக் கென்றொரு கிழவிபால் பேரம் பேசி
.. அவளிட்ட வேலையைச் செய்திடா(து) உலகுளோர் அடிபடு மாறு செய்தாய்
கத்துகான் நரிகளைப்
பரிகளாய்க் காட்டிஅப் பாண்டிய மன்னன் தந்த
.. கணக்கில்லாப் பரிசெலாம் பெற்றபின் மீண்டுமப் பரிநரி ஆகச் செய்தாய்
இத்தனை கூத்தையும்
இங்குளோர் அறிந்திலார் என்றுநீ எண்ணி யன்றோ
… இவண்வந்து பொதுவிலே ஈச!நீ தவழ்சிரிப் புடன்நட மாடி நிற்பாய்?
அனந்த் 12-11-2020
Tuesday, October 27, 2020
வாய்ப்பருள்வாய்
திருச்சிற்றம்பலம்
<> வாய்ப்பருள்வாய் <>
கள்ளம் சிறிதுமிலாக் கணக்கற்ற அடியார்கள்
.. கனகசபை நாதனுன்றன் களிநடனம் தனைப்பருகி
உள்ளம் நெகிழ்ந்தவர்
உகுக்கும்நீர் உள்தெரியும்
.. உன்னுருவின் பிம்பத்தை யேனும்கண் டுருகியின்ப
வெள்ளத்துள் ஆழ்ந்திடநல் வினையேதும் செய்யாஇவ்
.. வீணனுக்கும் ஒருவாய்ப்பை வழங்கிடநீ கருதாயோ?
துள்ளும் நடம்காட்டித் துரியநிலை ஈதென்று
.. சொல்லாமற்
சொல்லிநிற்கும் தூயபர தத்துவமே.
அனந்த் 28-10-2020
Wednesday, October 14, 2020
இரங்குவாயே
திருச்சிற்றம்பலம்
<> இரங்குவாயே <>
உலகசுக மொன்றையே உண்மையாய் நம்பிமெய் ஓம்பியே நாளும் ஓயும்
.. ஒருகலை யன்றிவே றொன்றுமே அறிந்திடா உலுத்தனா யிருந்த போதும்
நிலவுலவு சடையினோய் நின்திருப் பெயர்களில் ஒன்றையே செப்பி னாரேல்
.. நின்னருட் பார்வையை அன்னவர் பக்கமாய் நிறுத்திநீ யருள்வை என்பார்
பலவகையி லுன்புகழ் பாடியுன் தாளினை விலகிடா திரவு பகலாய்ப்
..பரவிடும் அடியனைப் பார்க்கவோர் வேளையை இதுவரை கண்டி லாய்போல்!
சிலையெனநீ நின்றிடின் மேலு(ம்)நான் செய்வதற்(கு) யாதுள தறிந்தி லேன்காண்
.. திருவுளம் இரங்குவாய் சிதையில்நான் புகுமுனம் தில்லைவாழ் நடன வேந்தே.
(14-சீர் ஆசிரிய விருத்தம்: கருவிளங்காய்
விளம் விளம் விளம் விளம் மா தேமா; விளம் விளம் விளம் விளம் விளம் மா தேமா)
அனந்த் 14-10-2020
Monday, September 28, 2020
காத்திட விரைவாய்
(ஸ்ரீ மாறுகால் நடராஜர், மதுரை)
<> காத்திட விரைவாய் <>
இறந்துநான் சென்ற பினரிகத் துள்ளோர்
.. ”இவன்சிவன் திருவடி நம்பி
மறந்தனன் மற்ற பணியெலாம் இன்று
.. மரித்தனன் பயனெதும் இலனாய்;
சிறந்த(து)என் உளதோ சிவனடி பேணித்
.. திரிந்தவர்க்(கு)?” என்றுபின் உரைக்கின்
பறந்தலோ போகும் பரமநின் பெருமை
.. பரிந்தெனைக் காத்திட விரையே.
(எழுசீர் விருத்தம்; கருவிளம் மா கருவிளம் மா கருவிளம் விளம் தேமா)
…அனந்த் 29-9-2020
Monday, September 14, 2020
குருபரன்
திருச்சிற்றம்பலம்
<> குருபரன் <>
சந்தக் குழிப்பு: தனதன தாத்தன தனதன தாத்தன
தனதன தாத்தன தந்ததான
{திருப்புகழ்: விரகற நோக்கியு முருகியும் வாழ்த்தியும்.. http://kaumaram.com/thiru/nnt0986_u.html)
**
ஒருபத மேற்றியு மொருபத நாட்டியு
… மொருகர மாக்கியு மென்றுமேலு
.. மொருகர நீக்கியு மொருதனி நேர்த்தியொ
….. டொருதிரு நாட்டிய மன்றிலாடும்
குருபர பார்ப்பதி கணவச டாட்சர
.. குகனொடு மூத்தவ னும்பராவு
…. குடியுறை பார்த்திப வெனவுனி லாட்படு
… குணமுடை யோர்க்கரு ளுங்குணாளா!
வருவினை போக்கிமு னுளவினை மாய்த்திடு
… …. வரதப ராத்பர வென்றுபாடி
…. வருமடி யேற்குன மலரடி காட்டியென்
…… மனமுன தாக்கிய அன்புபேணி
அருணையி லேற்றிய சுடரென வீற்றுநின்
.. னருளொளி யார்க்குமெ நன்றுகாண
…. குருவடி வாய்த்தெரி ரமணநின் மேட்டிமை
…. . குறைவற நாச்சொலி உய்ந்திடேனோ.
(பார்ப்பதி = பார்வதி; பார்த்திப = அரசனே; பராவு(ம்) = வணங்குகின்ற, புகழ்கின்ற; உன மலரடி = உனது மலர் அடி; யார்க்குமெ= யார்க்குமே; மேட்டிமை = மேன்மை, தலைமை)
... அனந்த் 14-9-2020/ திருத்திய வடிவம்20-9-2020.
Saturday, August 29, 2020
நாட்டம் கொள்ளாயோ?
திருச்சிற்றம்பலம்
<> நாட்டம் கொள்ளாயோ? <>
என்னுள் உறையும் உனையறியா(து)
.. உலகே உண்மை எனஇங்கே
அன்னை இழந்த குழவியைப்போல்
.. அழுமிவ் வேழை நிலையறிந்தும்
இன்னும் எனக்குன் அருளீயா
.. திருப்ப துனக்கோர் விளையாட்டோ?
பொன்னம் பலத்தில் புன்முறுவல்
.. புரிந்து நிற்கும் பொருளிதுவோ?
************
உருகும் ஒருகால் உன்னருளின்
.. உயர்வை நினைத்து மறுகணமே
இறுகும் இரும்பாய் எதையெதையோ
.. எண்ணி என்நெஞ்(சு) அதன்பின்னர்
மறுகும் என்றன் மடைமைகண்டு
.. வருந்தி இந்த வகையாக
உருளும் என்னை உய்விக்க
.. உன்றன் உள்ளம் உருகாதா?
************
சொல்லில் அடங்கா உன்சீரைத்
பொல்லேன் எனது புன்மையினைப்
இல்லா(து) இனிய பொழுதினைநான்
நல்லோ னாக எனைமாற்ற
அனந்த் 30-8-2020











