Sunday, March 15, 2026

 உ  திருச்சிற்றம்பலம்

இன்று சோமவாரப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.


                 <> அருளாயோ? <>



பாட்டினால் உன்னைப் பரவிய பழவடியார்

காட்டிய வழியில் கடையனும் நடந்துபர

வீட்டினை அடைய விண்ணவர் புடைசூழ

நாட்டியம் புரியும் நாதநீ அருளாயோ?    

                                                             … அனந்த் 15-3- 2026


அருளாயோ?

 உ  திருச்சிற்றம்பலம்

இன்று சோமவாரப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.


                 <> அருளாயோ? <>



பாட்டினால் உன்னைப் பரவிய பழவடியார்

காட்டிய வழியில் கடையனும் நடந்துபர

வீட்டினை அடைய விண்ணவர் புடைசூழ

நாட்டியம் புரியும் நாதநீ அருளாயோ?    

                                                             … அனந்த் 15-3- 2026


Saturday, February 28, 2026

இன்று சனிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.

திருச்சிற்றம்பலம்


civa lingam-4.jpg



ஆவினிலே ஐந்தேற்பான் ஆனைத்தோல் போர்த்திடுவான்

 மூவிலை மாலை முடியணிவான் - நாவாலே

 ஐந்தெழுத் தோதுகின்ற அன்பர் தமக்கருள்வான்

  எந்தைசிவன் செய்கை இவை

                                        அனந்த் 28-2-2026

 

Friday, February 13, 2026

 இன்று மகாசிவராத்திரிக்கு முந்திய சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்

 திருச்சிற்றம்பலம் 

                  <> காரணம் அறிந்தேன் <>

   

வாய்பாடு:

தேமா மா காய்  தேமா மா காய்

….. மா  மா   காய்  மா மா காய்

தேமா மா காய்  தேமா மா காய்

….. மா  மா   காய்  மா மா காய்)
            

தாதை எனநீ ஆடுங்கால்  தம்மை மறந்துன் மெய்யடியார்

…..தரையில் விழுந்து, மன(ம்)நெகிழ்ந்து, சம்போ! எனவாய் அரற்றிநிற்பார்

……..ஏதோ இதற்குக் காரணம்என்(று) எண்ணிப் பார்த்தேன்; பலகாலம்

….……ஏங்கி நின்றும் தவம்கிடந்தும் எங்கெல் லாமோ தேடியதம்

 

தாதை தம்கண் முன்னேஓர் தங்கம் வேய்ந்த கூரையின்கீழ்,

…. சல்சல் என்று சதங்கையொலி  தாளம் கூட்ட அருகினிலே

…….கோதை உமைகை தட்டஉன்றன் கூத்தின் அழகைப் பார்த்தாங்குக்

………..கூடி இருக்கும் இருடிகள்கை கூப்பித் தொழும்அக் காட்சியில்தம்

 

வாதை  யாவும் நிரந்தரமாய் மடியக் கண்டுஇங்(கு) இனிப்பிறவி

….வாரா தென்னும் வகையினில்நீ வலக்க ரத்தை மேல்தூக்கி

……வரமும் அளிக்கும் மகிழ்ச்சியிலே வந்த உணர்வின் விளைவேஇம்

……….மாந்தர் செயல்கள் எனஅறிந்தே மகிழ்ந்தேன் அதனைத் தொடர்ந்திந்தப்

 

பேதை யேன்ஓர் அறிவில்லாப் பிச்சன் உன்றன் பேர்சொல்லிப்

….பிறரை நானுன் அடியனெனும் பிரமை கொள்ள வைப்பவனின்

……பிழைகள் யாவும் பொறுத்தென்மேல் பிரியம் காட்டி எனக்குமுன்றன்

…….பேரெ ழில்சேர் நாட்டியத்தின் பெருமை விளக்கி அருளாயோ?  

 

(குறிப்பு: இது ஜனவரி 2016-ல் இடப்பட்ட பாடலைச் சற்றே திருத்தி அமைப்பட்ட வடிவம்; தாதை – நடன ஒலிக்குறிப்பு; தந்தை; வாதை = துன்பம்பிச்சன் = மருண்டவன்)

 

                                                                                 ... அனந்த் 12-2-2026

Thursday, January 29, 2026

 <> ஆற்றல் அளிப்பாய் <>


             திருச்சிற்றம்பலம்

 


AruNachalam.jpg


வலிவந்த வேளையென் வாழ்க்கையின் நோக்கம்

 

வலுவிழக்க வொட்டாது நெஞ்சத் – தவிப்பிதுதான்

 

ஆர்க்காம் எனவினவும் ஆற்றலை என்னுள்ளே

 

வார்க்காயோ அண்ணா மலை.

 

               ….அனந்த் 30-1-2026

Thursday, January 15, 2026

திருச்சிற்றம்பலம்

 

<> ஈர்த்திடுவாய் <>

 

chidambaram_ceilingpainting_01.jpg



பார்க்குமிட மெங்கு(ம்)நீ பரந்தொளிர் பாங்கினைப்
….. 
பாவியேன் அறிந்திலேனே

நீர்க்குமிழி அன்னவிவ் வாழ்க்கையை முற்றிலும்
… 
நிலையென நிற்குமேழைக்(கு)

 

ஆர்த்திடுபொற் சிலம்பொடு ஐயநீ தில்லையில்
… ஆடிடும் அழகுகாட்டி

ஈர்த்தெனைஆட் கொண்டிட ஈதுநற் றருணமாய்
… எண்ணிநீ காத்திடாயோ.


..அனந்த் 15-1-2026

Wednesday, December 31, 2025

                  திருச்சிற்றம்பலம் 

                     <> என் கதி <>


எண்ணச் சுழலின் நடுவேநான்

.. இங்கும் அங்கும் அலைப்புற்றேன்


அண்ணா மலையாய்! அனுதினமும்

.. அடியேன் லகில் உழன்றலைந்துள்

 

புண்ணா னேன்நான்  இனியுமருள்

.. புரியா திருந்தால் பாழாவேன்

 

கண்ணா ளாஉன் காலிணையே

.. கதியென் றடைந்தேன் காப்பாயே.

                         … அனந்த் 1-1-2026

 

அனந்த்

Wednesday, December 17, 2025

 திருச்சிற்றம்பலம்


<>பூசை ஏற்பான்<>


25-5-2014 PrdOsham- Sivan alankaram.jpg

அப்பிலே மூழ்கடித்(து) ஆங்கதன்பின் பல்வகையாய்

ஒப்பனை செய்(து)உவகை உற்றிடுங்கால் - தப்பியவன்

ஓசைசெயா தோடிச் சுடுகாட்டில் ஆடிப்பின்

பூசையை ஏற்பான் புகழ்ந்து.

அனந்த் 17-12-2025

Monday, December 1, 2025

இன்று பிரதோஷ நன்னாள். 

 திருச்சிற்றம்பலம்.   


                                       <.> அவன் நோக்கம் <>


                   


ஆலங் குடிமேவும் ஐயனவன் அன்னையவள் 

 கோலங் குறைக்கஅடி கோலியது  குணவதியின் 

 காலங் கடந்துநிற்கும் கவிதைகளைக் காதாரச் 

 சாலப் பருகுதற்குத் தான்கொண்ட தாகமன்றே.


                                                                       ... அனந்த் 02-12-2025

Sunday, November 16, 2025

 இன்று சோமவாரப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.


                    திருச்சிற்றம்பலம்

            <>விரும்ப வைத்தான் <>









கரும்பென என்முனம் காட்சிதந் தான்தனைக் காணவென்னை

விரும்பவைத் தான்பினர் வேண்டிய தந்துநான் மீண்டுமவன்

அரும்பதம் தூக்கியவ் வம்பலத் தில்நடம் ஆடுவதைத்

திரும்பவும் கண்டிடத் தாகம் வளர்த்தனன் தில்லைமன்னே
 


                        

<> வி

Saturday, November 1, 2025

இன்று பிரதோஷ நன்னாள்.

 திருச்சிற்றம்பலம் 

                    <> ஈயாயோ? <>


   

உடலில் ஒருகூ(று) உமையன்னை 
.. உறையக் கொடுத்தாய்; உம்பருய்யக் 

 கடலில் எழுந்த விடம்தங்கக் 
.. கண்டம் கொடுத்தாய்; விரிசடையை 

 அடலார் புனலுக்(கு) அன்(று)அளித்தாய் 
  அரனே! எனக்குன் திருவடிக்கீழ் 

 இடந்தந் தாலென் சிரமதன்மேல் 
.. இட்டுய் வேன்நான், ஈயாயோ?

                               .. அனந்த் 1-11-2025

Friday, October 17, 2025

இன்று சனிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.

                திருச்சிற்றம்பலம்

               <> தாள் வீழ்வோம்<>


             


மன்றில் நடமாடும் மன்னன் மனங்கனிந்து


இன்றுவரை நம்மையெலாம் இவ்வுலகில் - நன்றாக


வாழ்வித் தவன்பேர் மறவாமல் வைத்துள்ளான்

தாழ்ந்தவன்தாள் வீழ்வோம் தினம்.



.........           அனந்த் 18-10-2025


Friday, October 3, 2025


இன்று சனிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்


                     திருச்சிற்றம்பலம்


                  <> கூலி தருவாய் <>

         


எப்போதும் ஏத்திப் பணியும் அடியவர்க்குத் 


தப்பாது காசுதரும் சாமிஉனை – ஒப்புக்குப் 


பேசிப் புகழ்ந்துபிறர் முன்நடிப்பேன் என்பணிக்கும் 


காசுதரல் வேண்டும் கனிந்து. 


 (ஒப்புக்கு = போலியாக
)

Thursday, September 18, 2025


                <> உன் பாடு <>


         திருச்சிற்றம்பலம்


 

ஓதம் தனில்கல் உடன்கட்டி ஆழ்த்தியுயிர்ச்

சேதம் விளைக்கத் துணிந்தோரை – வாதிட்டுப்

போதம் புகட்டிய புண்ணியர் போற்றியஉன்

பாதம்விழு வேன்பின்னுன் பாடு!


 


Friday, September 5, 2025

                                           திருச்சிற்றம்பலம்


                               <> ஆட்டத்தின் நோக்கம் <>



         


உள்ளத்தில் உறைஉண்மை உணர்வாக ஒளிருமுன்னைத்

தெள்ளெனவே திருவடியார் காணு(ம்)வண்ண(ம்) தில்லையிலோர்

ஒள்ளியபொன் தாளுயர்த்தி ஒயில்நடத்தை உன்முகத்தில்

கள்ளமிலாச் சிரிப்புடனே கதிகூரக் காட்டுவையே. . 

                             ... அனந்த் 5-9-2025