Monday, November 19, 2012

பிரதோஷப் பாடல் - August 10 2007

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

http://groups.yahoo.com/group/santhavasantham/message/19751


அண்மைக்கும் அண்மையாய் ஐய!நீ அடியனின்
... ஐம்புலன் ஆகி நின்றாய்
நுண்மைக்கும் நுண்மையாய் நுகருமா(று) அருவமாய்
.. நுணுகிஎன் உட்பு குந்தாய்
உண்மைக்கும் உண்மையாய் உணர்வினில் ஊறிநீ
.. உன்னை'நான்' ஆக்கி வைத்தாய்
வண்மைக்கும் வண்மையே! மன்றுளோய்! உன்னைநான்
..வாழ்த்தவோர் வகையு மேது?

No comments: