Monday, November 19, 2012

பிரதோஷப் பாடல் - February 15 2007

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

நீயும் நானும்

உன்குணம் உன்நலம் உன்கருணை யாவும்நான்
நன்குணர்ந்த பின்னர்உனை நாடினேன் நீஅதுபோல்
என்குறை என்னிழிவு எல்லாம் அறிந்(து)ஏற்றல்
உன்கடமை யாமென்(று) உணர்.

=====================

பிறர்தோஷம் கண்டும் பொறுத்தருளும் ஐய!
பிரதோஷ நாளைப் பிழையாய் - மறந்தேனை
மன்னிப்பாய் என்று மனம்தெளிந்து இன்றிட்டேன்
என்இப்பா ஏற்பாய் இசைந்து.

No comments: