உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
http://groups.yahoo.com/group/santhavasantham/message/19220
தொலைவு
தில்லை எங்கோ இருக்கிறது
..தீயேன் இங்கே இருந்துகொண்டு
சொல்லத் தெரியாச் சொல்லிலுனைத்
..துதிக்கப் பார்த்துத் தோற்கின்றேன்
அல்லல் பட்டிங்கு அரற்றுகின்ற
..அடியேன் நிலைநீ அறிவாயேல்
எல்லை தாண்டி என்னருகே
..இந்தக் கணமே வாராயோ?
http://groups.yahoo.com/group/santhavasantham/message/19220
தொலைவு
தில்லை எங்கோ இருக்கிறது
..தீயேன் இங்கே இருந்துகொண்டு
சொல்லத் தெரியாச் சொல்லிலுனைத்
..துதிக்கப் பார்த்துத் தோற்கின்றேன்
அல்லல் பட்டிங்கு அரற்றுகின்ற
..அடியேன் நிலைநீ அறிவாயேல்
எல்லை தாண்டி என்னருகே
..இந்தக் கணமே வாராயோ?
1 comment:
--- In santhavasantham@yahoogroups.com, "tvsankarviswanathan" wrote:
திரு.அனந்த் அவர்களுக்கு: உங்கள் பிரதோஷப் பாடல் அருமை!" இறைவன் எங்கோ தூரத்தில் இருப்பதாக ஏன் கலங்கவேண்டும்? இதோ உங்கள் உள்ளத்துள் இருந்து உங்களுக்கு நலம் செய்வான்! என்று சிவவாக்கியர் சொல்கிறார்.
அப்பாடல் இதோ!
தூரம்தூரம் தூரம் என்றுசொல்லுவார்கள்,சோம்பர்கள்
பாரும் விண்ணும் எங்குமாய்ப் பரந்த இப்பராபரம்
ஊரு நாடு காடுதேடி உழன்றுதேடும் ஊமைகாள்
நேரதாக உம்முளே அறிந்துணர்ந்து நில்லுமே
-----------
சொல்லத் தெரியாச் சொல்லில் துதிப்பது பக்தியின் மூத்த நிலை. அபிராமி பட்டர் சொல்லுகிறார்
விரும்பித் தொழுமடி யார்விழி நீர்மல்கி மெய்புளகம்
அரும்பித் ததும்பிய ஆனந்த மாகி அறிவிழந்து
சுரும்பிற் களித்து மொழிதடு மாறிமுன் சொன்னதெல்லாம்
தரும்பித்தர் ஆவரென் றாலபி ராமி சமயம்நன்றே!
தோற்கவில்லை .வென்றிருக்கிறீர்கள்.
இலந்தை
--------------
மாணார் நடவேந்தை மாபெரும் தில்லைதனில்
காணாத் துயரைக் கவியேற்றித் - தேனாவால்
அந்த அரனாரை அன்போ(டு) அழைத்துவந்தார்
சந்த வசந்தச் சபைக்கு.
மாண் ஆர்=பெருமை நிறைந்த; அந்த=that, அழகிய; அழைத்துவந்தார்=அழைத்து
வந்தார், அழைத்து உவந்தார்
veNpA virumbi
================
Post a Comment