Monday, November 19, 2012

பிரதோஷப் பாடல் - September 24 2007

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

http://groups.yahoo.com/group/santhavasantham/message/19955


விசித்திரத் தெய்வம்


ஓடா நதியணிவீர் உலவா மதியணிவீர்
நாடா மலரணிவீர் நயவா விடமணிவீர்
கூடா இடம்உறைவீர் குறியா மொழிபகர்வீர்
பாடா திருந்திலரே பலவா யடியருமே!

ஓடா நதி, உலவா மதி = சடையுளடங்கிய கங்கையும் பிறை மதியும்;

நாடா மலர் = மாந்தர் விரும்பியணியாத எருக்கு, தும்பை, ஊமத்தை போன்ற பூக்கள்;

நயவா விடம் = அமுதத்தை நாடிப் பாற்கடலைக் கடைகையில் எழுந்த, யாரும் விரும்பாத ஆலகால நஞ்சு;

கூடா இடம் = தகாத இடமான சுடுகாடு;

குறியா மொழி = (தக்ஷிணாமூர்த்தியின்) இன்னதைக் குறிப்பது என்று அறிய இயலாத மொழியான மௌனம்.

No comments: