திருச்சிற்றம்பலம்
<> சந்தையில் ஆடும் சிவன்
<>
சத்தமிகு சந்தையிலே ஆடிநிற்கும் ஐயாநீ
நித்தமும் ஆடும் நியதியைப்பேய் - கத்துகின்ற
வெங்காட்டில் காட்டிப்பின் விண்விஞ்சும் தில்லையாம்
அங்காடிக் காட்டிடுவாய் ஆர்த்து.
{சந்தை= சத்தம் = ஒலி, ஏழு (சப்தம்); வேத ஒலிகளையும்,அவற்றில் உள்ள ஏழுவகைச் சந்தத்தையும் குறிக்கும் (காயத்ரி, உஷ்ணிக், அனுஷ்டுப், ப்ருகதி, பங்க்தி, த்ருஷ்டுப், ஜகதி) musical flow,
rhythmic movement of verse; 2. vedic prosody; 3. the veda; 4. stanza;
verse. சந்தை = (கழக அகராதி: கடைவீதி; வேதம் ஓதும் இடம்; அடியார்கள்
எழுப்பும் ஓசை நிரம்பிய பொன்னம்பலத்தையும் குறிப்பதாகக் கொள்ளலாம்); வெங்காடு = வெம்காடு, சுடுகாடு; அங்காடி = அங்குஆடி; ஆர்த்து = ஒலி எழுப்பிக்கொண்டு}
....... அனந்த் 12/13-11-2024
No comments:
Post a Comment