உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
என்னை மாற்றிவிட்டான்
எந்தை தில்லையில் மன்றுள்நீ ஆட ஆட - என்றன்
...சிந்தையும் உன்பின்னால் ஓட ஓட
எல்லையில் ஆனந்தம் அங்குமிங்கும் - அதை
...எடுத்துநான் சொல்லக்கண் விம்மிப்பொங்கும்
அம்பிகைப் பாகனாய் ஆடிடுவாய்! - உன்னை
.. அண்டின நானும்கூத் தாடிடுவேன்!
வெம்பவ நோயைநீ ஓட்டிடுவாய் - உன்றன்
...மேனியைச் சோதியாய்க் காட்டிடுவாய்!
உன்மத்தன் உன்பேரைச் சொல்லச் சொல்ல - நானும்
.. உன்மத்தன் ஆகின்றேன் மெல்ல மெல்ல
கன்மத்தைப் போக்கிடும் உன்நினைப்பே - என்றன்
.. கன்மமாய் ஆனதும் ஓர்களிப்பே
என்ன தவத்தைநான் ஆற்றிவிட்டேன் - ஐயா!
...என்னையும் உன்னைப்போல் மாற்றிவிட்டாய்!
அன்பின் சிகரத்தைத் தொட்டுவிட்டேன் - மற்ற
...ஆசைகள் யாவையும் விட்டுவிட்டேன்!

No comments:
Post a Comment