Monday, November 19, 2012

பிரதோஷப் பாடல் - October 23 2007

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

நாட்குறியாயோ?

மனத்துக் குகையினுள் புகுந்துன்
.. வசமெனை ஆக்கியுன் தொண்டர்
இனத்துக் குள்ளெனைப் புகுத்த
.. என்றுநீ நாட்குறிப் பாயோ?
சினத்துச் சிரிப்பினில் புரங்கள்
.. செற்றவ! இற்றுநான் வீழும்
தினத்துக் கிலைபல தினங்கள்
.. திருவுளம் இரங்கலா காதோ?

1 comment:

ananth said...

பிரதோஷப் பாடல்கள் மூலம் தொண்டர் இனத்துக்குள் என்றோ புகுந்துவிட்டீர்கள். நாங்களல்லவா இனத்துக்குள்ளெமைப் புகுத்த என்றுநீ நாட்குறிப்பாயோ? என்று சொல்லவேண்டும். !
அருமையான அமைப்பு.

இலந்தை

நமக்காகத்தான் அனந்த் அவ்வாறு கூறியிருக்கிறாரோ ??!!

அன்புடன் குமார்(சிங்கை)