இன்று பிரதோஷ நன்னாள்.
அழுமுன் பசியை அறிந்து முலையை
...அளிக்கும்
தாயின் அளியுடன்
தொழுவோர் துயரைத் துடைக்கும் தூயச்
.. சோதி! என்னைத்
தொடர்ந்துவந்(து)
இழுத்துன் முன்னம் வைத்தாய் பிறப்பும்
.. இறப்பும் இலாதோய்! உனைஎனுள்
அழுத்தி அமர்த்திக் கொண்டேன்; ஐயா!
... அகல இயலா இனியுமே.
(அளி –
அன்பு, கருணை; எனுள் -> என்னுள்)