Wednesday, December 11, 2024

இன்று பிரதோஷ நன்னாள். 


திருச்சிற்றம்பலம்

                        <> இனியன் <>



                       

      
வானினிக்க வையமெ லாமினிக்க வாகுடனெம்

கோனவன்றன் கூத்தினைக் கண்டிடநீர் கூடிடுவீர்

யானெனதென் றுள்ளிருந் தாட்டிவைக்கும் மாயையுட

னேனென்று கேட்டிடா தெடுத்திடுமோ ரோட்டமின்றே

(கூவிளங்காய் கூவிளம் கூவிளங்காய் கூவிளங்காய்).


பதம் பிரித்து:

வான் இனிக்க வையம் எலாம் இனிக்க வாகுடன் எம்

 கோன் அவன்தன் கூத்தினைக் கண்டிடநீர் கூடிடுவீர்
 
யான் எனதுஎன்று உள்இருந்து ஆட்டி வைக்கும் மாயைஉடன்
 
ஏன்என்று கேட்டிடாது எடுத்திடும்ஓர் ஓட்டம் இன்றே.
 

வாகு -> அழகு, ஒழுங்கு, திறமை, ஒளி.

                      .....அனந்த்  12-12-2024 

No comments: