Saturday, November 17, 2012

பிரதோஷப் பாடல் - December 02 2006

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா


சோதி வடிவினன்

பனிப்பிர தேசம் தன்னில்
..பளிங்குபோல் உருவம் காட்டும்*
தனிப்பெரும் சோதி அண்ணல்
..சதுர்முகன் மாலோன் அன்று
நுனித்துண ராத வண்ணம்
..நின்றனன் அருணை தன்னில்
சனிப்பிர தோச நாளில்
..சாருவோம் அவன்பொற் றாளே.

No comments: