உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
பழி யாருக்கு?
ஒருகால் உனைநான் நினைந்துமனம்
..உருகி நிலைத்தங்(கு) இருப்பதிலே
பெருமை அடைவேன் மறுகணமே
..பெரும்பேய் விடவும் கொடியவனாய்
உருவம் தரிப்பேன் உடனென்றன்
..உளம்விட் டகலும் உனநினைவு
*தருவாய் இதுபோல் இருநிலைஉன்
..தனைஏன் பழியார் தரணியுளோர்?
* உன=உனது, உன்
பழி யாருக்கு?
ஒருகால் உனைநான் நினைந்துமனம்
..உருகி நிலைத்தங்(கு) இருப்பதிலே
பெருமை அடைவேன் மறுகணமே
..பெரும்பேய் விடவும் கொடியவனாய்
உருவம் தரிப்பேன் உடனென்றன்
..உளம்விட் டகலும் உனநினைவு
*தருவாய் இதுபோல் இருநிலைஉன்
..தனைஏன் பழியார் தரணியுளோர்?
* உன=உனது, உன்
No comments:
Post a Comment