உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
கல்லைக் கனியாக்குவாய்
நில்லாமல் என்றுமோர் நிலையின்றி ஓடுமென் நெஞ்சினுள் உறுதி யாக
...நின்னுருவம் ஒன்றையே நாட்டிடநான் நினைக்கையில் நான்மிக நாணு மாறு
பொல்லாத எண்ணமே சதகோடி யாய்உளில் பொங்கிடும் அவற்றி னூடே
...புண்ணியனே நின்நிழல் புகுந்திடவும் அஞ்சுமே போக்கிடம் ஏதும் இல்லேன்
வல்லோனே என்றுனை வாழ்த்திடுவோர் சொல்லைநான் வாய்வழி கேட்ட துண்(டு)உன்
..வலிமையைநீ காட்டிட வாய்ப்பின்று வந்த(து)என் மனத்துறை மாச கற்றிக்
கல்லொன்று கனியென மாறிடும்ஓர் காட்சியைக் காசினி காணும் வண்ணம்
..காட்டிடுவாய் உன்திறன் கற்பகத்தின் காந்தனே! கைலையாம் மயிலை வாழ்வோய்!

No comments:
Post a Comment