உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
குன்றேபோல் கோபுரம்சூழ் தில்லைநகர்க்
..கோவிலில்பொற் கூரை வேய்ந்த
மன்றேறி நடமாடும் மாமணியே!
..மாதவர்தம் உள்ளத் தென்றும்
நன்றோதும் மந்திரமாம் நமச்சிவாய
..நாதத்தின் உருவே! உன்னை
இன்றேனும் நினைப்பதற்கோர் வாய்ப்பளித்தாய்
..இலன்இதற்கிங்(கு) கோர்கைம் மாறே!
No comments:
Post a Comment