Thursday, November 22, 2012

கீறியுள் புகுந்த கேள்வன் 12-7-2011

திருச்சிற்றம்பலம் 

<> கீறியுள் புகுந்த கேள்வன் <>

கூறுதற் கரிய கொடியவர் ஆளும் 
..கோட்டையாம் நெஞ்சில் சிறியதோர் துளையைக்

கீறியுட் புகுந்த கிரணமாய் அன்றுன்
.. கிருபையைச் செலுத்தி  அதன்வழி உன்றன் 

சீரடி இணையின் செம்மையும் காட்டிச் 
.. சிறியனேன் தனக்கும் சிவமுனைச் சேரும் 

பேறது கிட்டும் வாய்ப்பினைக் குறித்த 
.. பெரும!நின் திறத்தைப் பேசுதற் கரிதே.

அனந்த் 12-7-2011     

No comments: