Wednesday, November 21, 2012

பிரதோஷப் பாடல் - July 16 2012

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

செப்படி வித்தை

செப்படி வித்தையாய்ச் சிந்தையுட் புகுந்தெனைத் திகைப்பினில்ஆழ்த்தி இந்தச்
… சிறியனேன் தன்னைநீ சிரிக்கவும் களிக்கவும் செய்ததில்திளைத்து நின்றேன்
அப்படி என்னவோர் அவசரம் ஐய!என் அகத்தைவிட் டேனகன் றாய்?
.. அங்குள அழுக்கெலாம் கண்டதால் அஞ்சிநீ அடியனைத் துறக்கலாமோ?
இப்படிச் செய்வதோர் இரப்பவர்க் கருந்தனம் ஈந்தபின் அதைப்பறிக்கும்
.. இரக்கமில் மானிடர் இத்தரை மீதினில் இயற்றிடும் செய்கைஅன்றோ?
தப்புநான் செய்வதென் தொழிலதைத் திருத்தஉன் தாள்மலர் தன்னைஎன்னுள்
.. சந்ததம் தாங்கிடும் தகைமையைத் தருவது தாதைஉன் கடமைஅன்றோ?

No comments: