உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
கனவு தானோ?
வாடித் தளர்ந்த என்னை - நல்ல
.. வாடிக்கை தானிவன் என்றெண்ணி யேமன்றில்
ஆடிக்கொண் டேயிருந்த - அந்த
.. அம்பல வாணன்என் உள்ள அரங்கத்தை
நாடி இடம்பிடித்தான் - எந்த
.. நாட்டியக் காரரும் செய்ய ஒணாவொரு
வேடிக்கை தான்புரிந்தான் - அவன்
.. வேறுநான் வேறென் றெனாமலே ஆக்கினான்
ஆனந்த மானந்த மாய் - வினை
.. யாவும் ஒழிந்தபே ரின்ப வெளியிலே
நானந்த நாதனு டன் - எந்த
.. நாளும் பிரியாமல் தித்தித்தாம் தோம்தகத்
தானந்தத் தானந்தத் தாம் - என்ற
.. தாளத்தில் ஆடித் திளைத்திடப் போகையில்
ஏனந்தக் கள்ளன்என் னை - விட்டு
..எங்கோ மறைந்தனன் எல்லாம் கனவாமோ?
கனவு தானோ?
வாடித் தளர்ந்த என்னை - நல்ல
.. வாடிக்கை தானிவன் என்றெண்ணி யேமன்றில்
ஆடிக்கொண் டேயிருந்த - அந்த
.. அம்பல வாணன்என் உள்ள அரங்கத்தை
நாடி இடம்பிடித்தான் - எந்த
.. நாட்டியக் காரரும் செய்ய ஒணாவொரு
வேடிக்கை தான்புரிந்தான் - அவன்
.. வேறுநான் வேறென் றெனாமலே ஆக்கினான்
ஆனந்த மானந்த மாய் - வினை
.. யாவும் ஒழிந்தபே ரின்ப வெளியிலே
நானந்த நாதனு டன் - எந்த
.. நாளும் பிரியாமல் தித்தித்தாம் தோம்தகத்
தானந்தத் தானந்தத் தாம் - என்ற
.. தாளத்தில் ஆடித் திளைத்திடப் போகையில்
ஏனந்தக் கள்ளன்என் னை - விட்டு
..எங்கோ மறைந்தனன் எல்லாம் கனவாமோ?
No comments:
Post a Comment