Tuesday, November 20, 2012

பிரதோஷப் பாடல் - December 03 2010

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

திருவுரு

நீள்சடை நிறைமதி நிகர்முகம் நுதல்விழி
.. நேர்த்தியாய் நீல கண்டம்
வாளனை கண்ணினாள் வாழ்ந்திட இடந்தரும்
.. வாகுடை மேனி கஞ்சத்
தாளெனக் காட்டியுன் திருவுரு என்னுளே
.. தங்கிடச் செய்த தேவே
மூளுமுள் ளுணர்விலே முழுமையாய் ஒளிருமுன்
.. மெய்யுருக் காண்ப தென்றோ?

No comments: