உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
உனைமறந்தகணம் யாதுமி லாவகை வாழ்வில் உறவேண்டி
தினமலர்ந்தமல ராலுன சேவடி நாடும் அடியேனின்
வினைகளைந்தருள வேண்டுவன் மேலெழு காலின் விளைவாலே
தனைமறந்தநிலை சார்ந்தவர் தாமுணர் ஞானப் பொருளோனே!
மேலெழு கால் = குண்டலினி முறையில் மேல்நோக்கி எழும் சுவாசம்
குறிப்பு:
இப்பாடல் சம்பந்தரின் முதல் திருமுறை இரண்டாம் பதிகத்தில் காணும் பாடல்களின் அமைப்பை ஒட்டியது.
இப்பாடல்கள் நூல்களில் கீழ்க்கண்ட காட்டில் உள்ளவாறு சீர்பிரிக்கப் பட்டுள்ளன (பாட்டை இசைக்கும் விதத்தை ஒட்டியதாக இவ்வாறு சீர்பிரித்திருக்கலாம்):
குறிகலந்தவிசை பாடலி னான்நசை யாலிவ் வுலகெல்லாம்
நெறிகலந்ததொரு நீர்மைய னாயெரு தேறிப் பலிபேணி
முறிகலந்ததொரு தோலரை மேலுடை யானிட மொய்ம்மலரின்
பொறிகலந்தபொழில் சூழ்ந்தய லேபுய லாரும் புகலூரே.
முதல்சீர் நான்கசையாகாமல் அமைத்தால்:
குறிகலந்த விசைபாட லினான்நசை யாலிவ் வுலகெல்லாம்
நெறிகலந்த தொருநீர்மை யனாயெரு தேறிப் பலிபேணி
முறிகலந்த தொருதோ லரைமேலுடை யானிட மொய்ம்மலரின்
பொறிகலந்த பொழில்சூழ்ந் தயலேபுய லாரும் புகலூரே.
இவ்வகையில் மேலிட்ட பாடலைச் சீர்பிரித்து:
உனைமறந்த கணம்யா துமிலா வகைவாழ்வில் உறவேண்டி
தினமலர்ந்த மலரா லுனசே வடிநாடும் அடியேனின்
வினையறுந்து விழவேண் டுவன்மே லெழுகாலின் விளைவாலே
தனைமறந்த நிலைசார்ந் தவர்தா முணர்ஞானப் பொருளோனே!

No comments:
Post a Comment