Wednesday, November 21, 2012

பிரதோஷப் பாடல் - May 18 2012

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

அன்னை அருகிருக்க...

அலையூ டெழுந்த நஞ்சினைநீ
…. அமரர்க் கெனஅன்(று) அவசரமாய்
.... அருந்துங் காலை அருகிருந்த
……….. அன்னை தயவால் அதுமிடற்றில்

நிலையாய் நின்ற நிகழ்வினையும்
….. நெருப்பு விழியால் மன்மதனை
…… நீறாக் கியபோ(து) உமைஅவனை
……….. நிலைக்கச் செய்த தையும்நினைத்தால்,

தலையோ ரைந்தும் திருமுகத்தில்
…..தாங்கும் விழிகள் மூன்றுமெனத்
…. தருக்கோ டுலவும் சங்கர!நின்
……… தகைமை யெல்லாம் உன்செயலால்

மலையே றாமல் காக்கவொரு
…..மாதுன் அருகே இருப்பதைநீ
…… மறவா திருத்தல் நலமென்பேன்
………… மறுக்க உன்னால் இயன்றிடுமோ?

 

No comments: