Tuesday, November 20, 2012

பிரதோஷப் பாடல் - September 16 2009

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

பணிபுரிய அருள்வாய்

சந்தக் குறிப்பு

தனதனன தான தனதனன தந்த
தனதனன தான தனதான

உலவுபல ஏழை எளியவரின் துன்பம்
.. உணரவிய லாத படியாகி
... ஒருவழிஇ லாத மனிதருண வின்றி
.... உழலுநிலை ஏதுங் கருதாமல்

உலகுதரு போகம் நுகருவகை மிஞ்சி
.. உடைமைகளை நாளும் எனதாக
...... உரிமைகொளும் ஈன இழிநிலைமை தன்னை
....... உதறியினி நானும் கடையேறப்

பலவழியி(ல்) ஈசன் அடியவர்தம் நெஞ்சப்
.. பரிவொடுசெய் சேவை அதுபோலப்
... பரிசுகரு தாமல் பெருமுதவி பண்ணும்
..... பணியில்நினைக் காண அருள்வாயே

நிலவுசல(ம்) மேவும் பனிசடைய! கஞ்ச(ம்)
.. நிகர்விழிய ளோடு நடமாடும்
... நிமல!அழ கேச! நினதுபத மென்றும்
.... நிதமுமற வாது தொழுவேனே


சலம்= கங்கை; அழகேசன் = மதுரைவாழ் சுந்தரேசன்
 

No comments: