Tuesday, November 20, 2012

பிரதோஷப் பாடல் - March 08 2009

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

அமைதி கண்டேன்

அழுதுநிற்பேன் உடன் சிரித்திடுவேன் - அதற்(கு)
.. அர்த்தமுண் டோவென்(று) அறிய வொண்ணேன்
எழுதவொண்ணா நினை(வு) எவையெவையோ - தோன்றும்
.. ஏனெனக் காரணம் இயம்ப வொண்ணேன்
தொழுதுநின்றேன் துதி சொல்லிநின்றேன் - உளச்
.. சோர்வுகள் மெல்லத் தொலையக் கண்டேன்
முழுது(ம்)நின்ற ஒரு மூர்த்தமொன்று - என்னை
.. முத்தமிட்டுத் தன்னுள் மூழ்த்தக் கண்டேன்

1 comment:

ananth said...

கண்ட அமைதி கணநேர மும் பிரியா(து)
உண்டென்று காக்க உடன்.

இலந்தை