Monday, November 19, 2012

பிரதோஷப் பாடல் - November 10 2008

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

சிக்கெனப் பிடித்தாய் (9)

கையினால் தொழுதுன் காலடி பற்றிக்
.. கதறிநான் உலகினோர் எனைஉன்
மெய்யடி யானென் றெண்ணுமா றிங்கோர்
.. வேடமே காட்டுதல் அறிந்தும்
பொய்யனென் செயலைப் பொறுத்தெனை மாற்றப்
.. போவதாய்க் கங்கணம் கட்டி
ஐயனே! என்னைச் சிக்கெனப் பிடித்தாய்
.. ஆருனைப் போலுளர் அரனே!

No comments: