உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
காணரும் காட்சி
அண்டமெலாம் கடந்தோடி ஆகாச கங்கையவள் ஆவலுடன் நாடி வந்தோர்
.. ஆரணிய மெனத்திகழும் அரனுன்றன் சடாமுடியில் அருவியென மாறி வீழத்
துண்டமதி கண்டதனைத் தொடர்ந்தங்கு தானும்வந் திளைப்பாறி ஒளியை வீசத்
.. தும்பையது கொன்றைமலர்த் துணையோடு சுருள்குழலில் சுகந்தத்தைத் தூவி நிற்கக்
கண்டமதைத் தேடியொரு கடலிலுறை நஞ்சங்கே கறுத்தமணிக் கறையு மாகக்
… கானிலுறை மானொன்றுன் கரத்தழகு கண்டதனில் குடியேறிக் களித்து நிற்கக்
கண்டுதொழும் அடியாரின் கண்ணிணையின் வழியாக அவருள்ளம் புகுந்து வானோர்
… காணரிய விந்தையுருக் காட்டியருள் இறையுன்றன் திறமெங்ஙன் செப்பு வேனே.
அனந்த் 15-8-2012
==================

"ஆரணி
— பார்வதி; ஆரணியம்
— காடு" என்று
Lexicon பொருள் தர,
மேலுள்ள வரி
தரும் மயக்கம் அருமை ஐயா.
நன்றி.
அர்விந்த்
தரும் மயக்கம் அருமை ஐயா.
நன்றி.
அர்விந்த்
No comments:
Post a Comment