உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
காற்றில் கரைந்த கனவுகள்
தோற்றேன் உலகில் துயர்பட்டுத்
.. தொய்ந்தேன் எனினும் நீபரிந்தே
ஏற்பாய் எனுமோர் எண்ணத்தில்
.. இருந்தேன் இந்நாள் வரையிலுமோர்
மாற்றம் உன்றன் இடமிருந்து
.. வருதல் காணேன் நினைத்ததெல்லாம்
காற்றில் கரைந்த கனவுகளாய்க்
.. கழிந்தே போகத் திருவுளமோ?
கூற்றை உதைத்தாய் கும்பிடுவோர்
.. குறைகள் சிதைத்தாய் குறைமதியை
ஏற்றாய் தலையில் இடர்விளைக்கும்
.. எரிநஞ் சுண்டாய் என்றெல்லாம்
போற்றி உன்னைப் புகழ்வதெல்லாம்
.. பொய்யோ ஐயா புன்மையனைத்
தேற்ற மறந்தால் செய்வதெதும்
.. தெரியா தழிவேன் காவாயோ?
காற்றில் கரைந்த கனவுகள்
தோற்றேன் உலகில் துயர்பட்டுத்
.. தொய்ந்தேன் எனினும் நீபரிந்தே
ஏற்பாய் எனுமோர் எண்ணத்தில்
.. இருந்தேன் இந்நாள் வரையிலுமோர்
மாற்றம் உன்றன் இடமிருந்து
.. வருதல் காணேன் நினைத்ததெல்லாம்
காற்றில் கரைந்த கனவுகளாய்க்
.. கழிந்தே போகத் திருவுளமோ?
கூற்றை உதைத்தாய் கும்பிடுவோர்
.. குறைகள் சிதைத்தாய் குறைமதியை
ஏற்றாய் தலையில் இடர்விளைக்கும்
.. எரிநஞ் சுண்டாய் என்றெல்லாம்
போற்றி உன்னைப் புகழ்வதெல்லாம்
.. பொய்யோ ஐயா புன்மையனைத்
தேற்ற மறந்தால் செய்வதெதும்
.. தெரியா தழிவேன் காவாயோ?
No comments:
Post a Comment