Tuesday, November 20, 2012

பிரதோஷப் பாடல் - November 30 2009

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

குற்றம் பாராக் கூத்தன்

ஓராயிவ் வுலகில்யான் ஒருவர்க்கும் உதவாமல் உழல்வோன் என்றும்
பாராயுன் பதமலர்கள் ஒருநாளும் பணியாத பதர்யான் என்றும்
தேராயென் மனத்தடியே தேங்கிநிற்கும் தீதினையும் தில்லை நல்லோய்!
நேராயுட் புகுந்தெனது நினைவெல்லாம் நீகுறித்தாய் நின்ன தென்றே!

No comments: