Wednesday, November 21, 2012

பிரதோஷப் பாடல் - June 16 2012

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

அளவும் உளதோ?

சுந்தரன் என்பார் ஒருசாரார்
..துய்க்கும் போகம் அத்தனையும்
  ....துறந்தோன் என்பார் ஒருசாரார்
.......சுடரும் ஞானப் பேரறிவைத்
 
தந்தவன் என்பார் ஒருசாரார்
….தனக்கோர் இடமும் இல்லாத
…..தனியன் என்பார் ஒருசாரார்
.......தழலின் வடிவாய் இருவர்முன்
 
வந்தவன் என்பார் ஒருசாரார்
…வரையின் மகளைக் கைப்பிடித்த
…..மணமகன் என்பார் ஒருசாரார்
.......வடிவம் பலவாய்த் திகழுமிவன்
 
எந்தமை ஆண்டெம் வினைநீக்கி
…இணையில் அடிக்கீழ் இருத்துதற்கே
.....எத்தகை உருவும் ஏற்றுநிற்பான்
.......இவனது கருணைக்(கு) அளவிலதே.
 

No comments: