உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
தடையிலா வெளி
இடைவிடா தியங்கிடும் இருதயத் துடிப்பிலே ஈசனுன் நடன ஓசை
.... இசைத்திடல் காணுவார், இடையிலே மௌனமொன் றிருப்பதும் தாமு ணர்வார்
தடையிலா வெளியதில் தங்கியே தனித்தவோர் இன்பமும் தாம்நு கர்வார்
.... தாமெனும் அகந்தையைத் தகர்த்தவர் உன்னுடன் சார்ந்துபின் ஐக்ய மாவார்**
கடையனேன் யானுமிக் கதிபெறக் கனவிலும் கருதிடா வகையி லென்முன்
.. கனத்தவோர் தாளுடன் கதவமொன் றுள்ளதே கனகநற் சபைய! அஃதை
உடைத்திடும் திறன்உனக் கில்லையென் றுரைப்பையோ? உண்மையஃ(து) ஆகுமோதான்?
.. உடன்எனக் கொருவழி உதவிட வேண்டும்,என் உயிருடல் நீங்கு முன்னே.
**இது இதயத்தின் உள்ளே ஆனந்த வெளியில் (சிதாகாசத்துள்) இருக்கும் ஸ்ரீ நடராஜ மூர்த்தியைத் தியானித்து அவனுடன் ஒன்றுபடும் தகர மார்க்கம் என்னும் சாதனை முறையைக் குறிப்பது.
பார்க்க:
http://www.tamilvu.org/slet/l5F31/l5F31pd1.jsp?bookid=128&sec=5&pno=1892
http://thirupugazh.blogspot.com/2006/08/6.html
திருப்புகழ் -புகரப் புங்கப் பகரக் குன்றில்.. எனத்தொடங்கும் பாடல்.
தகரம் = இதயத் தாமரை எனும் கோயில்
தகராலயம்; தகராகாசம் = எல்லையற்ற பரந்த ஆனந்த வெளி

No comments:
Post a Comment