Tuesday, November 20, 2012

பிரதோஷப் பாடல் - August 07 2010

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

மாற்றி அருள்வாய்

தவறான தென்று மறைநூல்கள் மூலம் சதமே தெரிந்தும் பழியாவும்
.. சரியான தென்று பலவான சாக்குச் சொலியீனன் ஆற்றும் அதுவேளை,
தவமோடு யோக வழியாவின் மேலும் எளிதான நாம வழிபாடும்
.. தலைமேல் குவிந்த பணியா லெனக்கு முடியாத தாக எணும்வேளை
சிவமான ஞான உருவான தேவ! சிறிதே இரங்கி எளியேனின்
.. செயல்யாவு முன்றன் பரமாக மாறிச் செகமீது வாழும் படிசெய்து
பவரோக மேவி அழியாத தான நிலைகாண உன்றன் அருள்தாராய்
.. பதியான தில்லை தனிலேது ரீய நடமாடு கின்ற பெருமாளே.


பழி =குற்றம், பாவம்;
சாக்கு = வீண்காரணம்;
பவரோகம் = பிறவிப் பிணி;
துரீய = யாவற்றினும் மேலான

No comments: