Wednesday, November 21, 2012

பிரதோஷப் பாடல் - September 25 2011

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

கண்ணாளன்

ஆதவன் மதியனல் மூன்று(ம்)உன் விழிகளாய்
... அமைத்தனை அதனை மெச்சி
..... ஆயிரம் வகைகளில் அனுபவித்(து) உவகையில்
....... ஆழ்ந்திடும் அன்ப ருண்டு

மாதவம் ஏதுமே செய்திலா வேடனவ்
... வகையெதும் அறிந்தி டாமல்
..... வந்தனை செய்கையில் உன்கணில் குருதிகீழ்
....... வடிந்ததைக் கண்ட போது

யாதொரு தயக்கமு மின்றியே தன்விழி
... இடந்துனக் களித்த பின்னர்
..... யாமினிப் போற்றுதல் உன்கணோ அன்றியவ்
....... வெளியவேட் டுவன தாமோ?

மாதொரு பங்க!நீ மறுத்திடா(து) அடியர்நல்
.. மனத்துடன் அளிப்ப தேற்கும்
..... மாண்பினை இருத்தியுன் மலரடி பணிகுவேன் .
...... வந்தெனை ஆண்டுகொள்ளே.

No comments: