Wednesday, November 21, 2012

பிரதோஷப் பாடல் - December 07 2011

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

பேரின்பம்

கனகசபை நடனமிடு கடவுளுன தருளெனுமொர்
....கதிரவனின் கிரணமது படலாயின்
மனமதனில் உலவுபல மலமழிய எனதுயிரும்
...வனசமல ரெனஅலர உனபாதம்
அனவரதம் வருடுமொரு அரியபெரு நிலையடையும்
...அதனில்வரு சுகம்முனிவர் முறையோடு
தினமுமெரி தணலின்நடு வதனில்புரி தவமதனில்
... தெரியவரி தெனுமுணர்வில் உறைவேனே!


வனசமலர் - தாமரைப்பூ;
உனபாதம் = உன் பாதம்;


தில்லை இறைவனின் அருளென்னும் கதிரவனொளியால் எனது மனமாகிய தாமரை மலர்ந்து அவ்விறைவனின் தாளை அடையும் பேறு பெறும். அது கடுந்தவத்தத்தோருக்கும் கிட்டாத சுகம்

 

No comments: