உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
பற்றெலாம் அற்றதோர் பரம்பொருள் பாரெலாம்
...படைத்தும் தனித்து நிற்கும்
.....பரமேசன் என்றெலாம் பலவாக உன்றனைப்
.......பற்றிநான் கேட்ட துண்டு
சற்றுமே ஆங்கது சத்தியம் என்பதில்
....சம்சயம் இல்லை எனினும்
.....தகுதியென் றேதுமில் லாதஇச் சழக்கனேன்
.......சங்கரா என்ற ழைத்தால்
உற்றதோர் தாயினும் மேலதாம் அன்புடன்
....ஓடியே வந்த ணைத்தே
......உறுதுயர் நீக்கியென் உள்ளிலே உவகையை
........ஊட்டியே புரத்தல் காணின்
சுற்றமே அற்றவன் என்றுமுன் கேட்டசொல்
....சுத்தமாய் உண்மை ஆமோ?
.....சுருதியும் புகலொணாச் சோதியே! தொழும்பர்தம்
.......துணையெனத் தோன்று சிவமே!
‘ஆங்கது சத்தியம் என்பதில் சற்றுமே சம்சயம் இல்லை’ என்று கொண்டுகூட்டிப் பொருள் கொள்க,

No comments:
Post a Comment