Tuesday, November 20, 2012

பிரதோஷப் பாடல் - December 29 2009

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

Kaarthigai Dheepam Poems

அண்ணாமலையானுக்கு அரகரோஹரா

இன்று திருவண்ணாமலையில் சிவபெருமான் ஜோதி வடிவில் காட்சிதரும் கார்த்திகைப் பெருநாள். அதை ஒட்டி, அண்ணாமலையான் பேரில் இரண்டு துதிப் பாடல்கள்:

சந்தம்: தனனதன தனனதன தான தான தனதான

சோதி நெடியோன்

அனுதினமு(ம்) உலகசுகம் தேடி ஓடி அலைந்தேனே
.. அரனுனது பெயரையொரு போது(ம்) ஓத மறந்தேனே
எனதவல நிலையகல நீயும் தாயின் பரிவோடே
.. இவனுமினி ஒருபுதுமை காண வேணு மெனஓர்ந்து
கனகநிகர் உமைமருவு நாத! காத லுடன்நானுன்
.. கழலிணைகள் புகழ்நிதமும் பாடி யாட அருள்வாயே
அனலுருவில் அருணைவளர் சீல! மாலும் மறையீந்த
.. அயனவனு மறியவிய லாத சோதி நெடியோனே!


ஐந்தொழில் புரிவாய்

என்றன் உடல்படைத்(து) உன்நினை(வு) என்னுள் இருக்கு(ம்)நல்ல
தன்மை கணமும் தளராமல் காத்துத் தழைத்தெழுமென்
கன்மம் களைந்து கரும்புள் சுவையாய்க் கரந்துறைந்து
நன்மை அருளி நடத்துவாய் ஐந்தொழில் நாயகனே.
 

No comments: