Wednesday, November 21, 2012

பிரதோஷப் பாடல் - January 31 2011

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

வார்த்தை இலையே

விருப்பும் வெறுப்பும் நிறைவாழ்வில்
.. வீழ்ந்(து)உ ழன்றென் வினைச்சுமையைப்
பெருக்கிப் பிறிதோர் வழியறியாப்
.. பேதை எனநான் நலம்குன்றி
இருக்கும் போதென் எதிரேவந்(து)
.. இறையே! உன்றன் உருக்காட்டி
வருத்தம் தீர்த்த வகையினுக்கோர்
.. வார்த்தை தேடல் வீணாமே.

No comments: