Tuesday, November 20, 2012

பிரதோஷப் பாடல் - October 20 2010

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

உதறுவையோ?

வானத்துக் கங்கையையும் வான்மதியின் கீற்றினையும்
.. மாமுடியின் மேலமர்த்தி வளம்பெறநீ வகைசெய்தாய்
கானத்துப் பாம்பினையும் காட்டெருக்குப் பூவினையும்
.. கருணையுடன் பரிந்தேற்றுக் கடைத்தேற வழிசெய்தாய்
ஊனத்துள் தலையென்னும் உளுத்தழியும் உள்ளமுடை
.. ஒருவனெனை நீஏற்க ஒருநாளும் வாய்ப்புண்டோ?
ஞானத்தை நல்கியிந்த நாயேனைக் காவாயோ?
.. நட்டமிடு நாயகனே! நம்பிவந்தேன் உதறுவையோ?

No comments: