உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
நீயும் நானும்
நடமாடி மகிழ்ந்திடுவாய் நீதான் நானோ
.. நடமாட இயலாது நலிந்து நிற்பேன்
இடமாக மாதினைநீ ஏற்பாய் நானோ
.. இடம்தருவேன் நெஞ்சில்இழி எண்ணங் கட்கு
விடமருந்தி உலகனைத்தும் காப்பாய் நானோ
.. விடம்நிறைசொல் புகன்றுகுழி வீழ்வேன் ஐய!
உடன்மனம்நீ இரங்கியுன்னை உணர்ந்த அடியார்
.. உடனிருக்கச் செய்தென்னை உய்விப்பாயே!
நீயும் நானும்
நடமாடி மகிழ்ந்திடுவாய் நீதான் நானோ
.. நடமாட இயலாது நலிந்து நிற்பேன்
இடமாக மாதினைநீ ஏற்பாய் நானோ
.. இடம்தருவேன் நெஞ்சில்இழி எண்ணங் கட்கு
விடமருந்தி உலகனைத்தும் காப்பாய் நானோ
.. விடம்நிறைசொல் புகன்றுகுழி வீழ்வேன் ஐய!
உடன்மனம்நீ இரங்கியுன்னை உணர்ந்த அடியார்
.. உடனிருக்கச் செய்தென்னை உய்விப்பாயே!
No comments:
Post a Comment