உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
அருணை நிதி
தனதன தனனா தனதன தனனா
தனதன தனதன தனனா – தன
தனதன தனதன தனனா
சுரர்நரர் முனிவர் தொழுமுதல் முதலே
.. சுருதியின் முடிவுமுன் கழலே - அதி
.. சுகம்தரும் அதன்குளிர் நிழலே
பரசுக மதனைத் தருசிவ மெனவே
.. பரவிடு மடியவர் மனமே - நீ
.. பரிவுடன் உலவிடு வனமே
வரைமகள் இடமும் திரையவள் சடையும்
.. மருவிடும் இறையுனை வலமே
.. வருபவர்க் கருளுவை நலமே
அரஹர எனவே அனுதின முனையே
.. அணுகிடும் எனக்குமொர் கதியே - நீ
.. அருளுவை அருணையின் நிதியே !
திரையவள் = அலைகளை உடைய கங்கை
அருணை நிதி
தனதன தனனா தனதன தனனா
தனதன தனதன தனனா – தன
தனதன தனதன தனனா
சுரர்நரர் முனிவர் தொழுமுதல் முதலே
.. சுருதியின் முடிவுமுன் கழலே - அதி
.. சுகம்தரும் அதன்குளிர் நிழலே
பரசுக மதனைத் தருசிவ மெனவே
.. பரவிடு மடியவர் மனமே - நீ
.. பரிவுடன் உலவிடு வனமே
வரைமகள் இடமும் திரையவள் சடையும்
.. மருவிடும் இறையுனை வலமே
.. வருபவர்க் கருளுவை நலமே
அரஹர எனவே அனுதின முனையே
.. அணுகிடும் எனக்குமொர் கதியே - நீ
.. அருளுவை அருணையின் நிதியே !
திரையவள் = அலைகளை உடைய கங்கை
No comments:
Post a Comment