Tuesday, November 20, 2012

பிரதோஷப் பாடல் - April 10 2010

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

உவமையில்லான்


நிணத்தால் நிறைந்து நெடிதாய் வளர்ந்து நிதமும் சுகத்தை மிகநாடும்
.. நிலையில் உடலுள் நினைப்பில் நிலைத்து நினையே துதிக்கும் படியான
உணர்வைப் புகுத்தி உனதாள் இருத்தி உயுமா றெனையும் உருவாக்கும்
.. உனதன் பதற்கொர் உவமா னமெங்கு முளதோ உரைக்க, நில(ம்)மீது
கணக்கை முடிக்கக் கயிறே சுழற்றிக் கடுவே கமாக வருவோனென்
.. கருத்தில் நிருத்தன் கழலின் பதிப்புக் கணிலே உறுத்த உளைவானே
குணத்தில் சிறந்த குடியோர் தமக்குக் குறைவில் நலத்தைத் தருவோய்இக்
.. கொடியேன் நடத்தை குறியா தவர்தம் குழுவோ டிருக்க அருள்வாயே


நிணம்= மாமிசம்;
நிலையில் = நிலையில்லாத;
உனதாள்=உன்தாள்;
நிருத்தன் = நடமாடும் இறைவன்;
கணிலே=கண்ணிலே என்பதன் குறுக்கம்;
உளைதல் = வலியால். வருந்துதல்;
அழிதல்; தோற்றல்; கதறல்.

No comments: