Wednesday, November 21, 2012

பிரதோஷப் பாடல் - March 02 2011

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

இன்று மகாசிவராத்திரியும் பிரதோஷமும் கூடிய சிறப்பு நன்னாள். அதையொட்டி:


நடம்பயில் நாயகனும் விநாயகனும்

சந்திர சூரியர் தாழ்ந்துவ லம்வரும்
.. சிமையம் புனைஇமயச்
... சாரலில் எங்கணும் ’சங்கர!’ ஒலிநிறை
.... சந்தியப் பொழுதினிலே

தந்திமித் தாவெனத் தாதையும் அன்னையும்
.. தாண்டவம் ஆடுகையில்
.. தந்திமு கத்தொடு சதங்கைகு லுங்கிடத்
... தவழ்நடை பயில்குழவி

தந்தையைப் போலவே தான்நடம் ஆடிடத்
.. தவித்திடல் கண்(டு)அருகே
... சந்த(ம்)நி றைபல தாளவ கைகளில்
.... சதிரதை அதிரவைக்கும்

நந்திதன் வாத்திய நாதல யத்தொரு
.. நொடிபிச காதவண்ணம்
... நாதனின் மைந்தனைத் தோளினில் தாங்கியொர் .
.. நாட்டியம் ஆடிடுமே!


சிமையம்= மலையுச்சி, சிகரம்



No comments: