Wednesday, November 21, 2012

பிரதோஷப் பாடல் - March 31 2011

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

அரவம் ஏற்பாய்

படுக்க அரவம் படைத்தவன் தங்கையைப் பெற்றவ!நீ
உடுக்க அரவம் உகந்தனை நாடொறும் உன்நடம்கண்
மடுக்க அரவம் வரித்தனை காத்திட வாஎனநான்
விடுக்கும் அரவம் விரும்பத் தடையெது வேறுளதே?

அரவம்= பாம்பு, ஒலி;
நடம்கண் மடுக்க அரவம்= பாம்பின் உடல்கொண்ட பதஞ்சலி முனிவர்;
வரித்தல்= விரும்பித் தேர்ந்துகொள்ளல்

No comments: