Tuesday, November 20, 2012

பிரதோஷப் பாடல் - July 09 2010

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

பரிசு

கற்றத னால்விளை பயனே! உளந்தோன்றும்
.. கருத்தினை உருவாக்கும் கரமே!
பெற்றவை யாவிலும் பெரிதே! மறைநூல்கள்
.. பேசிடத் தொலையாத பொருளே!
உற்றதோர் துணையெனும் ஒன்றே! அறிவெல்லாம்
... உணர்த்திடும் உயர்ஞான குருவே!
சிற்பரம் எனத்திகழ் சிவமே! சிறியேற்கும்
... தெரிசனம் பரிசாக அருளே!

No comments: