உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
மாறுவேன் காண்
உடலைப் பெருக்கியென் உளத்தினைச் சுருக்கினேன்
.. உன்நினை வின்றியே வளர்ந்தேன்
குடலை மலர்களில் குறையுள மலரெனக்
.. கொண்டுநீ தள்ளிடாது என்றன்
நடலை தீர்த்தருள் செய்வையேல் மறுகணம்
.. நானுமுன் அடியிணை நாடிச்
சுடலைப் பொடியணி தேவ!நின் புகழ்சொலும்
.. நல்லனாய் மாறுவேன் காணே.
மாறுவேன் காண்
உடலைப் பெருக்கியென் உளத்தினைச் சுருக்கினேன்
.. உன்நினை வின்றியே வளர்ந்தேன்
குடலை மலர்களில் குறையுள மலரெனக்
.. கொண்டுநீ தள்ளிடாது என்றன்
நடலை தீர்த்தருள் செய்வையேல் மறுகணம்
.. நானுமுன் அடியிணை நாடிச்
சுடலைப் பொடியணி தேவ!நின் புகழ்சொலும்
.. நல்லனாய் மாறுவேன் காணே.
1 comment:
எதுகைகள் மிகமிக இயல்பாக வந்துள்ளன.
குடலை மலரில் குறையுள மலரெனை என்ற அடி என்னை அபிரரமை அந்தாதிக்கு இட்டுச் சென்றது "தரமன்று இவனென்று தள்ளத தகாது"
நெகிழ்ச்சியான பாடல்
இலந்தை
வணக்கம்.
பிரதோஷம் தவறாமல் சிறந்த துதிப்பாடலை நம்மிடை அளித்து வரும் பேரா. அனந்த் அவர்களின் பொருட்டு ஒரு வேண்டுதல்:
(வெண்பா)
நடலை மடித்து நலவாழ்வின் வித்து
நடலைக் கடனாக்கொள் நம்பா - விடலில்
மடலை இடுமனந்தர் வையிலெதிர் கொள்ளு
மடலை அடியோ டகற்று.
விடல் இல்=குற்றம் இல்லாத
Post a Comment