உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
ஏன்?
வானத் தமுதமென் மாட்டே இருக்கையில்
... பானம் அருந்துவதேன் -பிற
பானம் அருந்துவதேன்?
மோன இசையிலே மூழ்கிக் கிடக்கையில்
... கானம் விரும்புவதேன்? -பிற
கானம் விரும்புவதேன்?
தானம் தரஒரு தாதை இருக்கையில்
... ஈனரை யாசிப்ப தேன் - அற்ப
ஈனரை யாசிப்ப தேன்?
ஆன தனிமன்றில் ஆனந்தம் காண்கையில்
.. நானதை நாடாத தேன் - எனக்கந்த
ஞானம் வராததும் மேன்?
ஏன்?
வானத் தமுதமென் மாட்டே இருக்கையில்
... பானம் அருந்துவதேன் -பிற
பானம் அருந்துவதேன்?
மோன இசையிலே மூழ்கிக் கிடக்கையில்
... கானம் விரும்புவதேன்? -பிற
கானம் விரும்புவதேன்?
தானம் தரஒரு தாதை இருக்கையில்
... ஈனரை யாசிப்ப தேன் - அற்ப
ஈனரை யாசிப்ப தேன்?
ஆன தனிமன்றில் ஆனந்தம் காண்கையில்
.. நானதை நாடாத தேன் - எனக்கந்த
ஞானம் வராததும் மேன்?
No comments:
Post a Comment