Wednesday, November 21, 2012

பிரதோஷப் பாடல் - June 28 2011

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

பித்தனும் நானும்

அன்னையும் தந்தையும் இல்லா அனாதியான்
.. அனுதினம் மாட்டிலேறி
.... ஆகாரம் ஏற்கவோர் ஓட்டுடன் ஊரெலாம்
...... அலைந்தபின் அலுப்புத் தீரத்

தன்னைம றந்(து)இடு காட்டிடை இரவிலே
... தமியனாய் ஆடிநிற்பான்
..... தருணம் கிடைக்கையில் அம்பல மேறிஊர்ச்
.......சனத்துமுன் சதிர்ப யில்வான்

இன்னமும் கூறிலோ இவன்பல வேடமிட்(டு)
... எவரையும் ஏய்க்க வல்லான்
..... எடுத்தவோர் வேலையை முடித்திடாச் சோம்பியாய்
...... இருந்(து)அடி பெற்றும் நிற்பான்

என்னவோ அறிகிலேன் இத்தகைப் பித்தனை
.. என்னுளம் விரும்பி ஏற்றுஎன்
..... இடரெலாம் நீக்கிடும் ஈசனாய்க் கொண்டதே
...... இதுவுமோர் மாயம் அன்றே.

 

No comments: