Tuesday, November 20, 2012

பிரதோஷப் பாடல் - June 05 2009

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

கருணை மிகை

குப்பை நிறைஎன் மனம்நடுவே
.. குடிநீ கொள்ளத் துணிந்தசெயல்
தப்பென் றுரைத்தேன் சற்றும்நீ
.. தயங்கா தங்குன் கடையைவிரித்(து)
அப்பன் உன்றன் அருள்அமுதம்
.. அடியேற் களித்தாய் அட்டியின்றி
இப்போ துணர்ந்தேன் இறைவா!உன்
.. ஈகைக் கில்லை எல்லையென்றே

No comments: