உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
எளிய வழி
சந்தம்:
தத்தத் தனத்தனன தத்த தனத்தனன
தத்தந் தனத்தனன தனதான
விக்கித் துயர்ச்சலதி சிக்குங் கணத்தில்மனம்
.. விட்டுன் னருட்பெறவிங் கழுவேளை
மிக்கச் சிரத்தையுடன் சட்டென் றெடுத்ததொழில்
.. விட்டங் கிருக்குமுது விடையேறிப்
பக்கத் தடுத்தெனது துக்கந் தவிர்க்குமுன
.. பட்சஞ் சிறப்பதனி னெளிதாயென்
னிக்கட் டகற்றவென சித்தம் வசித்திடில
.. தெற்கு முனக்கும்நல மெனவாமே
*பதம் பிரித்து:*

.. விட்டுன் அருட்பெறஇங்கு அழுவேனை

.. விட்டங் கிருக்கும்முது விடையேறிப்
பக்கத் தடுத்தெனது துக்கந் தவிர்க்கு(ம்)உன
.. பட்சஞ் சிறப்(பு);அதனின் எளிதாய்என்
இக்கட் டகற்றஎன சித்தம் வசித்திடில்அது
.. எற்கும் உனக்கும்நலம் எனஆமே
சலதி = கடல்;
உன =உனது;
என = எனது;
எற்கும் = எனக்கும்
கெட்ட எண்ணங்கள் தோன்றி நாம் வருந்துகையில் இறைவன் ஓடி வந்து அவற்றின் விளைவுகளிலிருந்து நம்மைக் காப்பான் என்று அடியார்கள் சொல்வதால், தனக்கு அவ்வாறு அடிக்கடி விரைந்து வந்து போகும் சிரமத்தைத் தவிர்க்க அவன் எப்போதும் நிலைத்து நம் உள்ளத்திலிருத்தல் அவனுக்கும் நமக்கும் நன்மையன்றோ என்ற கருத்தில் அமைத்தது.
உருவ (சகுண) வடிவில் நினைப்பதை விடுத்து அருவமாக (நிர்க்குணப் பேருணர்வாக) வழிபட விரும்புவதைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.

No comments:
Post a Comment